உள்ளூர் செய்திகள்

திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 பரிசு!

தமிழ் வளர்ச்சித்துறை மூலம் மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.   தமிழ் மொழிப்பற்றை உருவாக்கவும், மனப்பாடம் செய்யும் திறனை வளர்க்கவும், குறள் கூறும் வழியில் நடக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் மனப்பாடம் செய்து, பிழையின்றி ஒப்புவிக்கும் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வீதம், 21 வயது வரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.   திருக்குறள் ஒப்புவிக்கும் திறமை உள்ள மாணவர்களை தேர்வு செய்யவும், பயிற்சி அளிக்கவும் மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் தலைமையில் தமிழ் ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் குழுவை அமைக்க தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் எழிலரசு உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், 1,330 குறள்களையும் ஒப்பித்த 23 மாணவர்களுக்கு, 2000 ஜன., 1 முதல் 2005 மே மாதம் 31ம் தேதி வரை தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 21 வயது வரை தொடர்ந்து மாதம் 1,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்