கல்வி மாவட்ட தடகளப் போட்டிகளில் 108 மாணவர்கள் வெற்றி
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த கல்வி மாவட்ட தடகளப் போட்டிகளில் 108 மாணவ, மாணவிகள் வென்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகள் தடகளப்போட்டிகள் நடந்தன. சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாத் பிரிட்டன் துவக்கி வைத்தார். 100 மீ., 200., மீ., 400 மீ., ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் 108 பேர் வென்றனர். அவர்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் ஷேக் அப்துல்லா பரிசு வழங்கினார். பயிற்சியாளர்கள் ஜான் சகாயராஜ்(கால்பந்து) வேல்முருகன்(தடகளம்), தினேஷ் (ஹாக்கி), ராஜேஷ்(நீச்சல்), உடற்கல்வி ஆசிரியர்கள் வளையாபதி, சந்திரசேகர், அஜீஸ்கனி, அஜ்மீர் ராஜா, கோபி, தினகரன், ரோஸ்லின், கவிதா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.