ஜி.சி.டி., கல்லூரிக்கு என்.பி.ஏ., குழு செப்.,12ல் வருகை
தேசிய தர நிர்ணயக்குழுவின் (என்.பி.ஏ.,) அங்கீகாரம் பெற்ற இன்ஜி., படிப்புகளின் தரம் சிறப்பாக இருக்கும்; இந்த பாடப்பிரிவுக்கு, மற்ற இன்ஜி., பாடப்பிரிவை விட கூடுதல் கட்டணம் செசலுத்த வேண்டியிருக்கும். இதனால், முக்கிய கல்லூரிகளில் என்.பி.ஏ.,வின் அங்கீகாரம் பெற்ற இன்ஜி., பாடப்பிரிவுகள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இந்த பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம் மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படும். பின், புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது நடைமுறை. கோவை தடாகம் ரோட்டிலுள்ள ஜி.சி.டி., கல்லூரியில் பி.இ., சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே என்.பி.ஏ., அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் பெறப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவதையொட்டி, மீண்டும் அங்கீகாரம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுடன், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன், பி.டெக்.,( ஐ.டி.,), எம்.இ., சிவில் பாடப்பிரிவில் ஸ்டக்சசரல், என்விரான்மென்டல், ஜியோ டெக் பாடப்பிரிவுகளுக்கும் என்.பி.ஏ., அங்கீகாரம் பெற ஜி.சி.டி., நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.மேலும், எம்.இ., மெக்கானிக்கல் பாடப்பிரிவில் மெஷின் டிசைன், தெர்மல் எனர்ஜி, மேனுபேக்சர், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜி., பாடப்பிரிவில் அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், வி.எல்.ஐ. எஸ்., (வெரி லார்ஜ் இன்டகிரேஷன் சிஸ்டம்), எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் என்.பி.ஏ., அங்கீகாரம் பெறப்படவுள்ளது. இந்த பாடப்பிரிவுகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி பற்றி அறியவும், தர நிர்ணய அங்கீகாரம் வழங்கலாமா என்பது பற்றி முடிவு செய்யவும் புதுடில்லியில் இருந்து தேசிய தர நிர்ணயக்குழு செப்.,12ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஜி.சி.டி., கல்லூரியில் ஆய்வு செய்கிறது.ஜி.சி.டி., கல்லூரி முதல்வர் அண்ணாத்துரை கூறுகையில், இதுவரை நான்கு இளநிலை பாடங்களுக்கு மட்டுமே தேசிய தர நிர்ணய அங்கீகாரம் பெற்றிருந்தோம். இந்த ஆண்டு கூடுதலாக இளநிலை மற்றும் முதுநிலை இன்ஜி., பாடப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெறவுள்ளோம் என்றார்.