தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கம் திருவொற்றியூரில் 124 பேர் பயன்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் அரசு கல்லுாரியில், தமிழக அரசின் 'தமிழ்ப்புதல்வன்' திட்டத்தின் கீழ், 124 மாணவர்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் பங்கேற்று, மாணவர்களுக்கான, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்., அட்டைகளை வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.விழாவில், அவர் பேசியதாவது :மாணவர்கள் ஒழுக்க நெறிகளுடன் கல்வி கற்றால், வாழ்வில் நிச்சயம் மேன்மையடைய முடியும். பெற்றோருக்கு அடுத்த நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களின் சொல்படி நடந்தால், வாழ்வின் இலக்குகளை எளிதில் அடைய முடியும். மாணவர்கள் சிறப்பான முறையில் படித்து, கல்லுாரிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் விஜயா மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.