உள்ளூர் செய்திகள்

தேசிய குதிரையேற்ற போட்டி கோவைக்கு 13 பதக்கம்

கோவை: பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான குதிரையேற்றப் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ மாணவியர் 13 பதக்கங்கள் வென்று அசத்தினர்.என்.இ.சி., பிரிலிம் மற்றும் ஜூனியர் ஈக்வஸ்டேரீயன் சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூரில் நடந்தன. இதில் கோவை ஸ்டேபிள்ஸ் குதிரையேற்ற அகாடமியை சேர்ந்த ஆராதனா, ஹர்ஷித், விக்னேஷ், பிரித்திவ், திவ்யேஷ், அர்ஜுன், பிரதிக், ஆதவ், ராம்ரெட்டி, அர்மான், தனிஷ்கா, ராகுல் ஆகிய 11 மாணவர்கள் பங்கேற்றனர்.ஷோ ஜம்பிங், டிரசேஜ் மற்றும் ஈவன்டிங் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவையை சேர்ந்த மாணவர்கள், 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்