பள்ளிகளில் மீண்டும் சேர்ந்த மாணவர்கள் 1,363 பேர்!
கடலுார்: அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, மத்திய, மாநிலஅரசுகள்பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விலையில்லா பாடபுத்தகம், சைக்கிள், சீருடை என பல்வேறு சலுகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.எனினும், சிலர்குடும்ப சூழ்நிலை, வறுமை, ஆர்வமின்மை உள்ளிட்டகாரணங்களால்பள்ளிக்கு செல்லாமலும், பள்ளியை விட்டு இடையில் நிற்பதுமாக உள்ளது. இதனால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.மாணவர்களின்எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசின்ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லாதகுழந்தைகளே இருக்கக்கூடாது என்பதற்காக 6வயது முதல், 19 வயது வரைஉள்ள மாணவ, மாணவியர் பற்றிய கணக்கெடுப்புநடத்த மத்திய கல்வி மற்றும்மனிதவள மேம்பாட்டு துறை அறிவுறுத்தியது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில், கடலுார்,அண்ணாகிராமம், பண்ருட்டி,குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, கீரப்பாளையம்,புவனகிரி, பரங்கிப்பேட்டை,குமராட்சி, காட்டுமன்னார்கோவில், நல்லுார்,விருத்தாசலம், மங்களூர், கம்மாபுரம்என, 14 ஒன்றியங்களில் கடந்த ஏப்., மாதம் துவங்கி ஜூன் வரை கணக்கெடுப்பு நடந்தது. இப்பணியில் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், வட்டாரமேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி கல்வி அலுவலர்கள் என, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.பஸ் நிலையங்கள், பள்ளிகள் அருகில் உள்ள குடியிருப்புபகுதிகள், செங்கல்சூளை, கட்டடப் பணி, சாலைப் பணி, ஓட்டல்கள், தங்கும்விடுதிகள், இலங்கைஅகதிகள் முகாம் என, பல்வேறு இடங்களில்கணக்கெடுப்பு நடந்தது.இதில், பள்ளியை விட்டு இடைநின்றவர்கள் மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர், மாணவியர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 852 பேர் என, தெரியவந்துள்ளது. இதில், பள்ளியை விட்டு இடை நின்றவர்களில் 1,363 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அவரவர் வயதிற்கேற்ப மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள மாணவர்கள் கல்லுாரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட தொழிற்கல்விபடிப்பில் சேர்ந்துள்ளனர். 465 மாணவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கடந்த மாதம் 2,759 மாணவர்கள் 15 நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு செல்லவில்லை என்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.