உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலை., ஆராய்ச்சி பணிக்கு ரூ.142 கோடி நிதியுதவி

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறை சார்ந்து, சிறப்பான முறையில், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடும் பல்கலைகளை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், நிதியுதவி செய்து வருகிறது. அந்த வரிசையில், அண்ணா பல்கலையை தேர்வு செய்து, 2014 முதல், தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு, தலா, 35.6 கோடி ரூபாய், நிதியுதவி வழங்கப்படும் என, மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இது, பல்கலைக்கு கிடைக்கும், சிறந்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் இந்த நிதியைக்கொண்டு, ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்கள் வலுப்படுத்தப்படும் என, பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்