கால்நடை மருத்துவ பல்கலையில் நாளை 16வது பட்டமளிப்பு விழா
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 16வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. இதில், 246 பேர் நேரில் பட்டம் பெறுகின்றனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 16வது பட்டமளிப்பு விழா, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில், நாளை (செப்., 10) காலை, 11:30 மணிக்கு நடக்கிறது. கவர்னர் ரோசய்யா தலைமை வகிக்கிறார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா, துணைவேந்தர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பட்டமளிப்பு விழாவில், 246 மாணவர்கள் நேரில் பட்டம் பெறுகின்றனர். 99 பேர், அஞ்சல் வழியில் பட்டம் பெற உள்ளனர். பி.வி.எஸ்.சி., இளங்கலை மாணவர் ராஜேஷ்குமார் யோகி, சிறந்த கல்வித் திறனுக்காக, 24 தங்கப் பதக்கங்களை பெறுகிறார். மாணவர்கள் கல்வித் திறனுக்காக, 111 பதக்கங்களும் பெறுகின்றனர்.