சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வு பிப்., 16ல் தொடக்கம்
சென்னை: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணைகள், வெளியிடப்பட்டன.மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனும் சி.பி.எஸ்.இ., 2026 - 27ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை, வெளியானது. அதன்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்., 16ல் தொடங்கி மார்ச் 9 வரை நடக்கிறது.மொத்தம், 83 பாடங்களுக்கான தேர்வை, 26.5 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.அதே போல், பிளஸ் 2 பொதுத் தேர்வு, பிப்., 16ல் தொடங்கி, ஏப்., 9 வரை நடக்கிறது. மொத்தம் 121 பாடத்திட்டங்களுக்கான தேர்வை, 19.8 லட்சம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியருக்காக, தேர்வுக்கு 101 நாட்கள் முன்னதாகவே, தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.