உள்ளூர் செய்திகள்

கட்டாயக் கல்வி சட்டம் குறித்து 2 நாள் பயிற்சி முகாம்

கோத்தகிரி: கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டாயக் கல்வி சட்டம் குறித்து, பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழு சார்பில், இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரி தலைமை வகித்தார். ஈளாடா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், ஆசிரியர் பயற்சி நிறுவன விரிவுரையாளர் சுப்ரமணியம் மற்றும் கக்குச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் போஜன் ஆகியோர், சிறப்பு கருத்தாளர்களாக கலந்துகொண்டு, பயிற்சி அளித்தனர். கோத்தகிரி பகுதியில் உள்ள, 19 பள்ளிகளில் இருந்து, பள்ளி தலைமை ஆசிரியர், பயிற்சி ஆசிரியர் மற்றும் பி.டி.ஏ., உறுப்பினர் என, தலா மூன்று பேர் பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியில், ஆறு முதல், 14 வயதுடைய குழந்தைகளுக்கு, கட்டாயக் கல்வி வழங்கும் சட்டம், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுவை நிர்வகிப்பது, பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து பயற்சியுடன், ஆலோசனையும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்