உள்ளூர் செய்திகள்

சுப்பையா மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் கலக்கல்

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர் சுப்பையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆனந்த் குப்தா, 1,181 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். இவர், கணக்கு பதிவியலில் "சென்டம்&' பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவி கிருத்திகா வணிக கணிதத்தில் சென்டத்துடன், 1,172 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், 1,165 மதிப்பெண் பெற்ற ஹிமன்சு பாடியா மூன்றாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மாணவி மதுமிதா கணக்கு பதிவியல், பொருளியல் பாடங்களிலும், ராகவி வர்த்தினி மற்றும் நந்தினி ஆகியோர் கணக்கு பதிவியலிலும், ஷப்னா வணிக கணிதத்திலும், அங்கித் டோடி வணிகவியலிலும் சென்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில், 1,100க்கு மேல், 14 மாணவர்களும், 1,000க்கு மேல், 32 மாணவர்களும் மதிப்பெண் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்