உள்ளூர் செய்திகள்

இளம் விஞ்ஞானிகள் திட்டம்; வரும் 20ல் பதிவு துவக்கம்

பெங்களூரு: பள்ளி மாணவர்களுக்கான, இளம் விஞ்ஞானிகள் திட்டம் - 2024க்கான பதிவு வரும் 20ல் துவங்குவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் உள்ளிட்டவற்றில் அடிப்படை அறிவை ஏற்படுத்தும் வகையில், &'யுவ விஞ்ஞானி கர்யாக்கிராம்&' எனப்படும் இளம் விஞ்ஞானிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்வதற்கான பதிவு வரும் 20ல் துவங்குகிறது.இது தொடர்பாக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:இளம் விஞ்ஞானிகள் - 2024 திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்யலாம். இதற்கான பதிவு வரும் 20ல் துவங்குகிறது. https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இரு வாரங்கள் நடத்தப்படும் பயிற்சி திட்டத்தில் பதிவு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 20. இந்த பயிற்சி அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் ஆகியவற்றில் மாணவர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்