உள்ளூர் செய்திகள்

நெல்லை பல்கலை கேம்பஸ் இன்டர்வியூ: 210 பேர் தேர்வு

திருநெல்வேலி: நெல்லை பல்கலையில் நடந்த பன்னாட்டு பாங்க் வேலைக்கான இன்டர்வியூவில் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து என்ற பன்னாட்டு பாங்க் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. ராயல்பாங்க் துணைத்தலைவர் ஆர்த்தி, பாங்கின் மனிதவள பிரிவை சேர்ந்த நிஷா, ருக்மணி, அஜோய், மணிஷர்மா,ஆஷ்பா அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 660 பேர் பங்கேற்றனர். கட்டுரை எழுத்து தேர்வு, குழு விவாதம், ஆன்லைன் தேர்வை தொடர்ந்து நேரடி இன்டர்வியூவும் நடத்தப்பட்டது. இதில் 210 பேர் தேர்வாகினர். இன்டர்வியூவிற்கான ஏற்பாடுகளை பல்கலை இளைஞர் நலத்துறை இயக்குநர் ரோசரிமேரி, உதவி ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்