மகளிர் உரிமைத்தொகை: சென்னையில் ஜூலை 24 முதல் முகாம்
சென்னை: வரும் செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் நடைபெறும் முகாம்களில் பெற்று, விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் காண, சென்னை மாநகரில் ஜூலை 24ம் தேதி முதல் 3,523 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.