உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச 3ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான அரசின் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டி.இ.ஓ., தனமணி தலைமை தாங்கி புத்தங்களை வழங்கினார். கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் 36, அரசு மேல்நிலைப்பள்ளிகள் 44, நிதியுதவி பெறும் பள்ளிகள் 30 என110 பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் நேற்று முதல் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்