அரசு மகளிர் ஐ.டி.ஐ., ஆகஸ்ட் 31 வரை நேரடி சேர்க்கை
புள்ளம்பாடி மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இலவச தொழிற் பயிற்சிக்கு நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி மகளிர் ஐ.டி.ஐ.,யில் 2011ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆகஸ்ட் 31ம் தேதி வரை மகளிருக்கு மட்டுமே சேர்க்கை நடைபெறும். சேர்க்கையில் எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் வயது வரம்பின்றி சேர்த்துக் கொள்ளப்படுவர். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 31ம் தேதிக்குள் வரவேண்டும். கம்மியர் மின்னணுவியல் பயிற்சிக்கு கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் இரண்டாண்டு ஆகும். டெக்ஸ் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துணி வெட்டுதல் மற்றும் தைத்தல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சி காலம் ஓராண்டாகும். சுருக்கெழுத்து ஆங்கிலம் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் ஓராண்டாகும். கோபா பயிற்சிக்கு ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் ஓராண்டாகும். தொழிற் பயிற்சிகளுக்கு பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அனுமதி கட்டணம் உண்டு. இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அரசு விதிப்படி உதவித்தொகை வழங்கப்படும். சேர்க்கைக்கு உச்ச வரம்பு இல்லை. வெளியூர் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. அரசால் வழங்கப்படும் அனைத்து கல்வித் தகுதிகளும் உண்டு. மேலும் விவரங்களுக்கு 99444-05750 என்ற மொபைல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.