புதிய கண்டுப்பிடிப்புக்கான போட்டி மாணவர்களுக்கு சாம்சங் அழைப்பு
சென்னை: தமிழக இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளையும், சமுதாய பிரச்னைகளை தீர்க்கும் திறனையும் ஊக்குவிக்கும் வகையில், 'சால்வ் பார் டுமாரோ' போட்டிக்கு, மாணவர்கள், ஜூலை 3க்குள் விண்ணப்பிக்கலாம் என, சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த 2022ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களுக்கு, 'டிசைன் திங்கிங்' பயிலரங்குகள் மற்றும் டில்லி ஐ.ஐ.டி.,யில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.கடந்த போட்டிகளில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 'ஆட்டிசம்' பாதித்த குழந்தைகளுக்கான எளிய சிகிச்சை கருவிகள், பார்வையற்றோருக்கான பிரத்யேக 'பிரெய்லி தொடுதிரை பேடு' அறுவை சிகிச்சை தேவையில்லாத, குறைந்த செலவிலான காது கேட்கும் கருவி என, பல உலகத்தரம் வாய்ந்த கண்டுப்பிடிப்புகளை, தமிழக மாணவர்கள் உருவாக்கினர்.தற்போது நடக்க உள்ள இப்போட்டிக்கு, 14 முதல் 22 வயதுக்கு உட்பட்டோர், 'ஏ.ஐ., லிவிங், சுகாதாரம் மற்றும் கல்வி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம்' ஆகிய கருப்பொருட்களில், ஏதேனும் ஒரு கண்டுப்பிடிப்பை உருவாக்கலாம்.விரும்புவோர், ஜூலை 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 88255 43614 மொபைல் போன் எண் அல்லது sree.varshnee@kaizzencomm.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.