விமானப்படை ஆட்சேர்க்கை தேர்வில் முறைகேடு; 4 பேர் கைது
சென்னை: விமானப்படை மையத்தில் பணியாளர் சேர்க்கைக்கு நடந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை ஆவடி விமானப்படை மையத்தில் பணியாளர் சேர்க்கைக்கு எழுத்துத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக ஆள்மாறாட்டம் செய்த இருவர், ஜி.எஸ்.எம்., டிரான்ஸ்மிட்டர் வைத்து பதில்களை கேட்டு எழுதிய இருவர் என ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.