உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி.,களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளில் 497 இடங்கள் காலி!

இந்த காலி இடங்களை பொதுப் பிரிவுக்கு மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 3.11 லட்சம் பேர் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வை எழுதினார்கள். அதில் எஸ்.சி., மாணவர்கள் 28,393. எஸ்.டி., மாணவர்கள் 8514. 13 ஐ.ஐ.டிக்களிலும் சேர்த்து எஸ்.டி., மாணவர்களுக்கான 414 இடங்களில் 159 மாணவர்கள் மட்டுமே தர்வு செய்யப்பட்டார்கள். எஸ்.டி., மாணவர்களுக்கான இடங்களில் 690 பேர் மட்டுமே தகுதி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. எஸ்.சி.., மாணவர்களுக்கு 15 சதவீதமும் எஸ்.டி., மாணவர்களுக்கு 7.5 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் இந்த பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களை நிரப்ப முடியாத நிலை தொடர்ந்து இருக்கிறது என்பதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ஐ.ஐ.டி.களில் அமல்படுத்தத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் காலி இடங்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்