உள்ளூர் செய்திகள்

பீஹாரில் ஆசிரியர் தேர்வில் ஆள்மாறாட்டம்: 5 பேர் கைது

பாட்னா: பீஹாரில் ஆள்மாறாட்டம் செய்து ஆசிரியர் தேர்வு எழுதியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். பீஹாரில் மேல்நிலை, இடைநிலை பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு கடந்த 21-ம் தேதி மாநிலம் முழுதும் நடைபெற்றது.இதில் சஹார்சா மாவட்டத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் சிலர் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த புகாரில் புர்பாபஜாரில் இருவர் , பைஜநாத்புரில் மூவர் என 5 பேர் பிடிபட்டனர். அவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் உண்மையான தேர்வர்கள் இல்லை என்பதும், ஆள்மாறாட்டம் செய்தவர்கள் என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்