உள்ளூர் செய்திகள்

அழகப்ப செட்டியார் கல்லூரி;ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு ரூ.5 கோடி

காரைக்குடி: காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு, டெக்யூப் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இன்ஜி., கல்லுõரிகளில் தொழில் நுட்ப கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் நுட்ப கல்வி தர மேம்பாட்டு திட்டம் (டெக்யூப்) உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுõரியில், 2012--15-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் ரூ.12.5 கோடி நிதி பெறப்பட்டது. இந்த நிதியில் சி.என்.சி., லேத், மில்லிங், வைப்ரேஷன் அனலைசர், ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர், 15 கே.என்.டிஜிட்டல் யு.டி.எம்., நெட்ஒர்க் ஸ்பெக்ட்ரம், மாடர்ன் எலக்ட்ரிக்கல் டிரைவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆசிரியர், ஆசிரியரல்லாதவர்கள், மாணவர்களுக்கு தேசிய அளவிலான கருத்தரங்கு நடத்தப்பட்டு, அவர்களின் ஆராய்ச்சி திறன் மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2016-17ம் நிதியாண்டில் ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் மாணவர்களின் ஆராய்ச்சியை மேம்படுத்துதல், தொழிற்சாலைகள், கல்லுாரிகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்ததுல், மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி, தனி பயிற்சி அளித்தல், தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துதல், நவீன படுத்தப்பட்ட ஆய்வகங்கள் உருவாக்கப்பட உள்ளது. கல்லுாரி முதல்வர் மாலா கூறும்போது: டெக்யூப் மூலம் இந்த நிதியாண்டுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அழகப்பா இன்ஜி., கல்லுாரியில் அடிப்படை வசதி மேம்படும். வளாக நேர்காணலில் 45 சதவீத மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு முன்னணி நிறுவனங்களான விப்ரோ, எப்.எல்.ஸ்மித் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணி ஆணை பெற்றுள்ளனர். அதிக பட்சமாக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளனர். கல்லுாரி வளாகத்தில் 18 கிலோவாட் சோலார் வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு சோலார் அமைக்க திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்