உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் 50 மாணவர்களுக்கு பணி நியமன கடிதம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, தளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராஜா தலைமை வகித்தார்.ஓசூர் மற்றும் பெங்களூருவிலிருந்து வந்திருந்த டாடா எலக்ட்ரானிக்ஸ், ஜி.டி.டி, பவுண்டேசன் உட்பட பல முன்னணி தனியார் நிறுவனங்கள், இறுதியாண்டு மாணவ, மாணவியரை, வளாக தேர்வு மூலம் தேர்வு செய்தன.அமிடிக்கோ பிசினஸ் மேலாளர் மகேந்திரன், ஜி.டி.டி, பவுண்டேஷன் மேலாளர் பிரசாந்த் ஆகியோர், வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள், பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம், போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கமளித்தனர். மொத்தம், 100க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது.கணினி துறைத்தலைவர் குமரன், ஆங்கில துறைத்தலைவர் (பொறுப்பு) ரகு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர்கள் சரவணகுமார், பூபாலன், மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்