தமிழகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை; 50% பணியிடங்கள் காலி!
தமிழகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. முக்கிய கல்வி நிறுவனங்களில் 50%க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.மாநில உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன. இதனால் உயர்கல்வியில் முன்னோடியாகத் திகழும் தமிழகத்தின் நற்பெயர் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 15 மாநிலப் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமலும் இயங்கி வருகின்றன.இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில், 67.6% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 67.9% உதவிப் பேராசிரியர் நிலையிலும், 85% இணைப் பேராசிரியர் நிலையிலும், 43% பேராசிரியர் நிலையிலும் உள்ளன. இந்த ஆண்டு மேலும் 11 பேர் ஓய்வு பெறவுள்ளதால், நிலைமை இன்னும் மோசமடையும். தற்போது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் பொறுப்பு ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு அனுமதிக்கப்பட்ட 50 பேராசிரியர் பணியிடங்களில் இரண்டு மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதால், பேராசிரியர் மட்டத்தில் 96% காலிப் பணியிடங்கள் உள்ளன. இணைப் பேராசிரியர் பணியிடங்களும் 86.1% காலியாக உள்ளன. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 92.9% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 74.4% உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது 13 பல்கலைக்கழகங்களிலேயே மிகவும் கடுமையான இளநிலை ஆசிரியர் பற்றாக்குறையாகும்.மாநிலத்தின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒட்டுமொத்த காலிப் பணியிடங்களின் விகிதம் 34.1% ஆக உள்ளது. இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 67.5% மற்றும் பேராசிரியர் பணியிடங்களில் 62.6% காலியாக உள்ளன. 192 உதவிப் பேராசிரியர் இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. 15 அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அழகப்பா பல்கலைக்கழகத்தில் 80.6% பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. பல்வேறு வளாகங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் தற்காலிக பேராசிரியர்களை அதிகளவில் சார்ந்துள்ளன.பதினைந்து அரசுப் பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வருகின்றன. இதனால் ஏற்படும் பேராசிரியர் பற்றாக்குறை, நமது தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.பல்கலை பெயர் - மொத்த பணியிடங்கள் - காலிபணியிடங்கள் - (அடைப்பு குறிக்குள் சதவீதம்)1.சென்னை பல்கலை - 513 - 347 - (67.6%)2.திருவள்ளுவர் பல்கலை - 78 - 51 - (65.4%)3.மதுரை காமராஜ் பல்கலை - 306 - 183 - (59.8%)4.பாரதிதாசன் பல்கலை - 236 - 129 - (54.7%)5. அழகப்பா பல்கலை - 288 - 121 - (42%)6.அண்ணா பல்கலை - 1847 - 630 - (34.1%)7. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - 42 - 14 - (33.3%)8.அன்னை தெரசா - 65 - 20 - (30.8%)9.பெரியார் பல்கலை - 168 - 39 - (23.3%)துணைவேந்தர், முதல்வர் இல்லை!சென்னை அண்ணா, மதுரை காமராஜ், சேலம் பெரியார், திருச்சி பாரதிதாசன், தஞ்சை தமிழ், கோவை பாரதியார், சிதம்பரம் அண்ணாமலை, தமிழக திறந்த வெளி, சென்னை அம்பேத்கர் சட்டம் உட்பட 15 அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இங்கு ஐ.ஏ.எஸ்.,கள் தலைமையில் கன்வீனர் குழு செயல்படுகிறது. மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர், தேர்வாணையர், டீன், தொலைநிலைக் கல்வி இயக்குநர், கூடுதல் தேர்வாணையர் என அனைத்து உயர் பதவிகளும் காலியாக கிடக்கின்றன. இதனால் பல்கலைகள் என்.ஐ.ஆர்.எப்., நாக் போன்ற 'ரேங்கிங்' பெறுவதில் கவனம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்பத்திற்கேற்ப பாடத் திட்டங்களில் மாற்றம் செய்ய முடியவில்லை. கல்வி, நிர்வாக பணிகளை சீராக்கும் செனட், சிண்டிகேட், பைனான்ஸ் போன்ற கூட்டங்கள் நடத்த முடியாமல் உயர்கல்வி முடங்கி வருகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 188 அரசு கலை அறிவியல், பி.எட்., கல்லுாரிகளில் 105ல் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. சீனியாரிட்டி பிரச்னை தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தாலும் இப்பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலும் உயர்கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.