உள்ளூர் செய்திகள்

கல்கோடியாஸ் பல்கலை மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் வேலை

நொய்டா: உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள, 'கல்கோடியாஸ்' பல்கலை மாணவர் ஒருவர், வளாக வேலைவாய்ப்பு முகாமில், 60 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்தில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு தேர்வாகி உள்ளார்.'கல்கோடியாஸ்' பல்கலையில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 2026ல் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சமீபத்தில் நடந்தது.இதில் தொழில்நுட்பம், நிதி, மற்றும் பொறியியல் துறைகளை சேர்ந்த, 'அசென்ச்சர், இன்போசிஸ், கேப்ஜெமினி' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.இந்த ஆண்டு, அதிகபட்சமாக 60 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்தில் மாணவர் ஒருவர் வேலைக்கான கடிதம் பெற்றுள்ளார். பல மாணவர்கள் 15 லட்சம் ரூபாய் முதல் 26 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் வேலை பெற்றுள்ளனர்.இது குறித்து கல்கோடியாஸ் பல்கலை வெளியிட்ட அறிக்கையில், 'தொழில் நிறுவனங்களுடன் இணைந்த திறன் மையங்களை அமைத்துள்ளோம். இங்கு தொழில் அனுபவத்துடன் இணைந்த கற்றல் முறை பின்பற்றப்படுகிறது.'இதனால் மாணவர்கள் நேரடியாக வேலைக்கு தயாராகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலையுடன் இணைந்து இந்த பயிற்சி முறை உருவாக்கியுள்ளோம்' என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்