உள்ளூர் செய்திகள்

அன்னை தெரசா மகளிர் பல்கலையில் 6,300 பேருக்கு பட்டம்!

விழாவிற்கு கவர்னர் பர்னாலா தலைமை வகித்தார். துணைவேந்தர் அருணா சிவகாமி வரவேற்றார். மத்திய அறிவியல்,தொழில்நுட்பத்துறை செயலாளர் ராமசாமி பேசுகையில், ‘மனிதனுக்குள் உள்ள சிக்கல்களை தவிர்க்கவும், கலாச்சார ரீதியாக மாற்றம் கொண்டு வரவும் பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே முடியும். பெண்களின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம். ஆனால் உண்மையில் சமூகத்தில் போதியளவில் வளர்ச்சி இல்லை. அதை மேம்பாடு அடைய செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும். நாட்டில் அமைதி, வளமான கலாச்சாரம் அமைய பெண்கள் அதிகளவில் உயர்கல்வி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பதிவாளர் மணி, கலெக்டர் வாசுகி,எஸ்.பி.,பாரி உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கவர்னரின் பேத்திக்கு பட்டம்: கவர்னர் பர்னாலாவின் பேத்தி ஆயிஷா பல்கலை., சென்னை மையத்தில் எம்.ஏ., படித்தார். கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆயிஷாவிற்கு கவர்னர் பட்டம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்