டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர 8,000 பேர் போட்டி
சென்னை: டிப்ளமோ நர்சிங் படிப்பில் உள்ள, 2,000 இடங்களில் சேர, 8,000 பேர் போட்டியில் உள்ளனர். கலந்தாய்வு, செப்., இரண்டாம் வாரம் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஐந்து மருத்துவக் கல்லூரிகளைச் சார்ந்துள்ள நர்சிங் பள்ளிகளில், இரண்டு ஆண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புகள் உள்ளன. மொத்தம், 2,000 பேர் சேர்க்கப்பட உள்ளனர். இதில் சேர, 8,139 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவம் சார் படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆய்வு நடந்து வருகிறது. செப்., இரண்டாவது வாரத்தில், கலந்தாய்வு நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.