உள்ளூர் செய்திகள்

பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: 94% பேர் தேர்ச்சி

சென்னை: பி.எட்., படிப்பிற்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றுக்கான தேர்வு மே மாதம் நடந்தது. 65 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாணவர்கள் www.tnteu.in என்ற பல்கலைக்கழக இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய மாணவர்களில், 94 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்