மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் நீலகிரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 82 சதவீதம் : இன்று வெளியான +2ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், நீலகிரி மாவட்டத்தில், 82 சதவீதம் பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் முதலிடத்தை சாம்ராஜ் பள்ளி மாணவர் ரகு முதலிடம் பெற்றுள்ளார். இவர் 1183 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நாகை மாவட்டத்தில் 81சதவீதம் பேர் தேர்ச்சி : நாகை மாவட்டத்தில் மொத்தம் 81சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் டாக்டர் ஜி.எஸ்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி ப்ரியங்கா மற்றும் நாகை, தேசிய மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவன் தங்கவடிவேல் ஆகியோர் 1168 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தையும், நாகை, சர்மிளா கார்த்தன் மேல்நிலைப்பள்ளி மாணவன் சத்யநாராயணா 1167 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் பரசுராமன் 1165 மதிப்பெண் பெற்று 3வது இடத்தையும் பிடித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 89.48 சதவீதம் : இன்று வெளியான +2ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், திருப்பூர் மாவட்டத்தில், 89.48 சதவீதம் பதிவாகி உள்ளது. மொத்தம் 18,728 பேர் தேர்வு எழுதியதில், 16,758 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விவேகானந்தர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ரங்கநாதன் 1179 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். கோவையில் 90.97சதவீதம் பேர் தேர்ச்சி : ப்ளஸ் 2 தேர்வில் கோவை மாவட்டத்தில் 90.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.5 சதவீதம் அதிகமாகும். பொள்ளாச்சியில் 86.95சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை, பீளமேடு நேஷனல் மாடல் பள்ளி, யாஸ் அஸ்வினி என்ற மாணவி 1180 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். புதுச்சேரியில் தேர்ச்சி விகிதம் 83.54 சதவீதம் : யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தேர்ச்சி விகிதம் 83.54 சதவீதமாக பதிவாகி உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஜி. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இது, கடந்த ஆண்டை விட 9 சதவீதம் ஆகும் எனவும், 11428 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 9547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.