உள்ளூர் செய்திகள்

மாணவர்களை எச்சரிக்கும் தேர்வு துறை

சென்னை: கூடுதல் மதிப்பெண் பெற்றுத் தருவதாக யாராவது கூறினால், மாணவர்கள் ஏமாற வேண்டாம் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு, அதிக மதிப்பெண்களுடன் போலியாக தயாரிக்கப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மூலம், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் முயற்சித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கினர். இவர்களுக்கு, போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்துக் கொடுத்த ஆசாமிகளையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தற்போது மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, போலி மதிப்பெண் பட்டியல் ஊடுருவி விடக்கூடாது என்பதில் தேர்வுத்துறை எச்சரிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை நேற்று(11-05-11) வெளியிட்ட அறிவிப்பில், "மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது அணுகி, கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதாக கூறினால், அதை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம்&' என கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்