கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி
இதற்காக, 5 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்படுத்தப் படுவார்கள் என்று தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமலைசசாமி கூறினார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் சார்பில், பீர்க்கண்காரணை அரசினர் மேல்நிலை பள்ளியில் கிராமஊரக விளையாட்டுப் பயிற்சி திட்டம் நடத்தப்பட்டது. இதன் திட்டவிழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பீர்க்கண்காரணை கிராம ஊரக விளையாட்டு பயிற்சி திட்ட பொறுப்பாளர் ஜெயசித்ரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் திருமலைசசாமி, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், ஒரு நேரத்தில் கிராமப்புறங்கள், பல்கலைக் கழகங்களை நாடிச் செல்லும் நிலை இருந்தது. தற்போது, பல்கலைக்கழகங்கள் கிராமப்புறங்களை நாடி செல்கின்றன. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறும் ஐந்தாயிரம் ஆசிரியர்கள் கிராம விளையாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று 10 நாட்கள் கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டுக்களையும், அதன் நுணுக்கங்களையும் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யப்பட்டு வருகிறது. உடற்கல்வியை பள்ளிகளில் கட்டாய பாடமாகவும், கல்லூரிகளில் விருப்ப பாடமாகவும் கொண்டு வர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டில், இதை நடைமுறைப்படுத்த ஏற்பாடு செசய்யப்பட்டு வருகிறது. விளையாட்டு என்பது மாணவர் பருவத்தில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். மாணவர்களை தினசரி அரை மணி நேரமாவது விளையாட விடவேண்டும் என்றார். விழாவில், மாணவர்களின் வாள்வீச்சு விளையாட்டின் செசயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. முன்னதாக, விழாச்சுடர் பீர்க்கண்காரணை முக்கிய சாலைகள் வழியாக பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ராணி, பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.