உள்ளூர் செய்திகள்

நர்சிங், மருந்தியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: இரண்டாண்டு பி.எஸ்சி. நர்சிங் மற்றும் மருந்தியல் பட்டப்படிப்பில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் மருத்துவ கல்வி இயக்குனர் ஷீலா கூறினார். அவர் கூறியதாவது: மூன்றரை ஆண்டு நர்சிங் பட்டய படிப்பு மற்றும் மருந்தியல் பட்டய படிப்பு முடித்தோர், இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.tnhealth.org மற்றும் www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து, வரும் 16ம் தேதி(ஜூன்) மாலை 5 மணிக்குள், தேர்வுக் குழு அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன், 350 ரூபாய்க்கு, ஏதாவதொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், "செயலர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10" என்ற பெயரில், "டிடி" எடுக்க வேண்டும். "டிடி" சென்னையில் மாற்றத்தக்கதாக இருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. தமிழக அரசு பணியில் இருக்கும் வரன்முறை செய்யப்பட்ட நர்சுகள், 2011 மே 31 அன்று, இரண்டாண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும். அரசு பணியில் உள்ளோர், தற்போது பணிபுரியும் நிலைய தலைவர் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள், இணையதளத்தில் மட்டும் கிடைக்கும். இவ்வாறு ஷீலா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்