உள்ளூர் செய்திகள்

பொறியியல் பட்டப்படிப்பையும் ஆன்லைனில் பதியலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்ய அறிவுருத்தப்பட்டது. வேலைவாய்ப்பு மற்றும் பள்ளி கல்வித் துறைகளில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு இப்பணி செய்து முடிக்கப்பட்டது. மாநில முதல்வர் ஆணையின்படி, 4.80 லட்சம் மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு, பதிவு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்­ளன. தற்போது, பி.இ., பி.டெக்., பொறியியல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 61 ஆயிரத்து 200 பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றது தொடர்பிலான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொறியியல் பட்டதாரிகள் சென்னை அல்லது மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மட்டுமே பதிவு செய்ய செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், ஏற்படும் காலவிரயம், அலைச்சல் மற்றும் போக்குவரத்து செலவுகளை தவிர்ப்பதற்காகவும், தற்போது அனை­த்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையிலும், பொறியியல் பட்டதாரிகள் அவர்களது பதிவுகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே இணையதளம் மூலமாக பதிவு செய்து சென்னை மற்றும் மதுரைக்கு செல்வதை தவிர்க்கலாம். பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இணையதளம் மூலமாக பதிவு செய்ய செல்லும்போது, பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, 10வது அல்லது +2 மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரி மாற்று சான்றிதழ் ஆகியவற்றினை உடன் எடுத்து செல்ல வேண்டும். பதிவு செய்த மாவட்டத்திலேயே பொறியியல் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை உடனே வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்