உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி விண்ணப்பம்

சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பணியிடங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது சுலபமல்ல. இதற்காக தனியார் பயிற்சி மையங்கள் ஏராளமாக உள்ளன. சென்னை அண்ணா மேலாண் பயிற்சி நிறுவனம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்குகிறது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர், திருச்சி கலெக்டர் அலுவலகம் இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்