இந்தியர்களை இழுக்கும் கனடா பல்கலைக்கழகங்கள்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கும் இந்த பல்கலைக்கழகங்களின் குழுவினர் சென்று வருகின்றனர். கனடாவில் கல்வி கற்பது எவ்வளவு தரமானதாகவும் உயர்வானதாகவும் இருக்கிறது என்பதை இந்தக் குழுவினர் விளக்கவிருக்கின்றனர். கனடா பல்கலைக்கழகங்களில் தற்போது 5400 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகளின் கல்வி முறைகளின் உயர்வான தரத்தை கனடா கல்வி முறை உள்ளடக்கியுள்ளதால் இந்திய மாணவர்களுக்கு கனடா கல்வி என்பது மிகவும் பலன் தரக்கூடியதாக இருக்கும் என்பதே இந்தக் குழுவினரின் மந்திர வார்த்தையாக இருக்கிறது. கனடாவின் பல பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் படித்து வருகின்றனர் என்றும் சர்வதேச அளவில் கனடாவின் கல்வி அதிக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது. கனடா பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அதிகமாக விரும்பிப் படிப்பது பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், டெலிகம்யூனிகேஷன்ஸ் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளைத் தான். இவற்றில் இன்ஜினியரிங் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகள் தான் அதிக செலவைக் கொண்ட படிப்புகளாக இருக்கின்றன. சராசரியாக இந்தியர்கள் கனடா கல்விக்காக 20 முதல் 30 ஆயிரம் கனடா டாலர்களைச் செலவழிக்க வேண்டியுள்ளது. கனடா கல்வி பற்றிய தகவல்களைப் பெற: www.cois.org