உள்ளூர் செய்திகள்

படித்த இளைஞர்களுக்கு கடன் வசதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8ம் வகுப்பு அல்லது அதற்குமேல் படித்த இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தில் மூலம் கடன் வசதி அளிக்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் மணிமேகலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : மாவட்டத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு அல்லது அதற்குமேல் படித்த இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 5 லட்சம் வரையில் தொழில் துவங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய பொதுப்பிரிவினருக்கு 35 வயதும் மற்ற பிரிவினருக்கு 45 வயதும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக 5 லட்சமும், சேவை தொழிலுக்கு 3 லட்சமும், உற்பத்தி சார்ந்த வியாபார தொழிலுக்கு 1 லட்சமும் கடன் வழங்கபடுகிறது. இது தவிர திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 15 சதவீதம் மானியம் வழங்கபடுகிறது. மேலும், பொதுபிரிவினர் திட்டமதிப்பீட்டில் 10 சதவீதமும், இதர பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மாற்றுதிறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு 5 சதவீதம் அவர்களின் சொந்த முதலீடு செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்