இக்னோவின் காதுகேளாதோருக்கான கல்வி மையம்
காதுகேளாதோருக்கான கல்வி மையத்தை இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் துவக்க உள்ளது. மத்திய அமைச்சகத்தின் உதவியோடு இக்னோ துவக்கியுள்ள இந்த மையம், இந்தியாவின் சைகை மொழி குறித்து ஆராயவும், சைகை மொழியை கற்றுத் தரவும் உதவும். இந்தியாவில் உள்ள காதுகேளாதோருக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இம்மையம், கற்பித்தல், கற்றுக்கொள்ளுதல், பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களின் திறனை வளர்க்க பெரிதும் உதவி செய்யும். காதுகேளாதோருக்கு முழு நேர வகுப்புகளையும், தொலைதூரக் கல்வி முறையாகவும் அளிக்க வாய்ப்பு உள்ளது.