உள்ளூர் செய்திகள்

மின்பகிர்மான மேலாண்மையில் சான்றிதழ் படிப்பு

எரிசக்தித்துறையில் வேலைவாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையில் மின்பகிர்மான மேலாண்மையில் ஆறுமாத மின்பகிர்மான சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம், எரிசக்தித்துறை அமைச்சகம், USAID-India, Poer Finance Corporation ஆகியவற்றுடன் இணைந்து Advanced Certificate in Power Distribution Management  என்ற பெயரில் வழங்குகிறது. இதற்கான கட்டணம் 4,000 ரூபாய். இப்பாடத்திட்டம், மின்பகிர்மானம், எரிசக்தி மேலாண்மை தொடர்பான பொருள்களை உள்ளடக்கி அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு www.ignou.ac.in  என்ற இணையப் பக்கத்தை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்