மதுரை மருத்துவ மாணவருக்கு முதலிடம்
மதுரை: அகில இந்திய மனநல நிபுணர்கள் கழகம் சார்பில் விசாகப்பட்டினத்தில் மருத்துவ மாநாடு, கருத்தரங்கு நடந்தது. இதில் தமிழகம் உட்பட 5 தென்னிந்திய மாநில மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் நடந்த வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மதுரை மருத்துவ கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஏ.வி.சுந்தரகண்ணன், எஸ்.சாயிராம் ஆகியோர் முதலிடம் பெற்றனர். அவர்களை மதுரை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் ராமானுஜம் பாராட்டினார்.