உள்ளூர் செய்திகள்

கல்லூரியிலேயே மாணவர்களுக்கு வாக்காளர் விண்ணப்பம்

விருதுநகர் : "கல்லூரி மாணவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர, படிக்கும் இடத்திலோ, சொந்த ஊரிலோ, ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம்" என, தேர்தல் கமிஷன் பார்வையாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். விருதுநகரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியை, தேர்தல் கமிஷன் பார்வையாளர் ராஜேஷ் லக்கானி ஆய்வு செய்தார். அனைத்துக் கட்சியினர் கூட்டத்தில், கருத்துக்களை கேட்டறிந்தார். பின், அவர் கூறியதாவது: தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதிய வாக்காளர் சேர்க்கைக்கும், விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. புதிய வாக்காளர்கள், கல்லூரிகளில் அதிகம் உள்ளனர். இவர்களைச் சேர்க்க, கல்லூரியிலேயே விண்ணப்பம் வழங்கப்பட்டு, கல்லூரி மூலமாக விண்ணப்பங்கள் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியூர் மாணவர்கள், அவர்களது சொந்த ஊரில் அல்லது கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில், வாக்காளர்களாகச் சேர்ந்து கொள்ளலாம். சொந்த மாவட்டத்தில் சேர விண்ணப்பித்திருந்தால், அந்தந்த மாவட்டங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர முகவரி மற்றும் தற்காலிக முகவரியை வைத்து, இவ்விண்ணப்பங்கள் குறித்து, விசாரணை செய்து சேர்க்கப்படும். இவ்வாறு, ராஜேஷ் லக்கானி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்