மதுரையில் ஓவியம், நடனப் போட்டி
மதுரை : மதுரை வடமலையான் மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவு மற்றும் தினமலர் இணைந்து, நவ.,14ல் பல்திறன் போட்டிகளை நடத்த உள்ளன. மதுரை சொக்கிகுளம் வடமலையான் மருத்துவமனையில் போட்டிகள் நடக்கின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு, காலை 9 முதல் 10 மணி வரை ஓவியப் போட்டி. பிறந்தது முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கான ஆரோக்கிய குழந்தைப் போட்டி காலை 10- 11 மணி வரை நடக்கிறது. 11 முதல் 12 மணி வரை நடனம், கட்டுரைப் போட்டிகள், மதியம் 3 மணிக்கு பரிசு வழங்கும் விழா நடக்க உள்ளன. ஓவியம், மாறுவேடப் போட்டிக்கு, தேவையான வற்றை தாங்களே கொண்டுவரவேண்டும். பள்ளி தலைமையாசிரியர் மூலம் முன் பதிவு செய்ய வேண்டும். கட்டுரைகளை 2 பக்கத்திற்கு எழுதவேண்டும். முன் பதிவுக்கு: 0452-254 5400.