ஆர்.பி.ஐ.யின் மாணவர்கள் ஊக்குவிப்புத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் இளம் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி அதில் சுமார் 150 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட உளளது. போட்டித் தேர்வில் இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஆங்கிலம் மற்றும் முக்கியமான சில இந்திய மொழிகளில் அமையும். தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர் 2 முதல் 3 மாதங்களுக்கு செயல் திட்டங்களில் பணியாற்ற வேண்டும். பணியாற்றும் காலத்திற்கு ரூ.7500 தொகுப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் வழங்கப்படும். விண்ணப்பிக்கத் தகுதிஇந்தியாவில் அங்கீகாரம் பெற்ற பல்கலையில் ஏதேனும ஒரு இளநிலை பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 23 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முந்தைய ஆண்டுகள் எதிலும் ஆர்.பி.ஐ. இளம் மாணவர்கள் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்று ஆர்.பி.ஐ.யில் பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி டிசம்பர் 16, 2011 ஆகும். போட்டித் தேர்வுஇந்தியாவில் பல்வேறு நகரங்களில் இந்த போட்டித் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். போட்டித தேர்வு 2012ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி நடைபெறும். தெரிவுத் தேர்வின் முடிவுகள் 2012ம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள www.rbi.org.in/youngscholars.aspx இணையதளத்தைப் பார்க்கவும்.