உள்ளூர் செய்திகள்

பாட்னா பல்கலை.,துணைவேந்தர் மீது தாக்குதல்

பாட்னா: பாட்னா பல்கலைகழக துணை‌வேந்தரை மாணவர்கள் தாக்கினர். பீகார் மாநிலம் பாட்னா பல்கலைகழக அலுவலக வளாகம் மற்றும் விடுதிகள் மோசமான நிலையில் இருப்பதாக நிர்வாகத்தினரிடம் மாணவர்கள் முறையிட்டுள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து ஆல் இந்தியா மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தினர். நேற்று 9 வது நாளில் பல்கலைகழக துணை வேந்தர் ஷம்பு நாத் சிங், இது குறித்து விளக்கம் கேட்கும் போது பிரச்சினை முற்றிய நிலை‌யில் துணை வேந்ததை தாக்கினர். இதில் அவரது வலது காதில் காயமடைந்து ரத்தம் வழிந்‌தது.இந்நிலையில் 8 பேர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக ‌போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்