உள்ளூர் செய்திகள்

மானந்தல் பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு

அவலூர்பேட்டை: தாயனூர் அருகே நடுநிலைப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். தாயனூர் அடுத்த மானந்தல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 197 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளிக்கான குடிநீர் வசதியினை ஊராட்சி நிர்வாகம் செய்துள்ளது. சில மாதங்களாக கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், இங்குள்ள தொட்டியில் குடிநீர் சரிவர கிடைக்காமல் போனது. மாணவர்கள் பயன்படுத்துவதற்கான 4 கழிவறைகள் இருந்தும், தண்ணீர் வசதி இல்லாததால் மாணவிகள் இயற்கை உபாதைகளுக்காக வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் அவதிப்படுகின்றனர். பள்ளியின் நுழைவு வாயில் அருகே நடப்பாண்டில் புதிதாக சிறு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதிலிருந்து குழாய் இணைப்பை ஏற்படுத்தி, பள்ளியிலுள்ள தொட்டியில் தண்ணீர் கிடைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்