உள்ளூர் செய்திகள்

விரும்பும் நாளில் தேர்வு எழுதலாம்!

புதுடில்லி: தேர்வு எழுதும் நாட்களை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளும் புதிய வசதியை, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. ‘வாக் - இன் - இன்டர்வியூ’ போல, ‘வாக் - இன் - எக்சாம்’ திட்டத்தை இந்த பல்கலைக்கழகம் துவக்கி உள்ளது. இத்திட்டத்தின் மூலம், செமஸ்டர் தேர்வுக்காக மாணவர்கள் ஆறு மாதம் காத்திருக்க தேவையில்லை. அதற்கு முன்பாகவே, குறிப்பிட்ட நாட்களில், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மையங்களுக்கு சென்று, தேர்வு எழுதலாம். ஒவ்வொரு மாதமும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இத்திட்டத்தின் மூலம், தேர்வு நேர மன அழுத்தம் ஏற்படாது. இந்த புதிய திட்டத்தை பல்கலைக்கழகத்தின் நிறுவன நாளில், துணை வேந்தர் ராஜசேகரன் பிள்ளை துவக்கி வைத்தார். அப்போது, ஆரம்ப கட்டமாக, சில குறிப்பிட்ட மண்டல தேர்வு மையங்களில் வாரம் ஒரு முறை, ஞாயிற்றுக் கிழமையன்று தேர்வுகள் நடத்தப்படும் என்றும், பின்னர் இத்திட்டம் அனைத்து தேர்வு மையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்