உள்ளூர் செய்திகள்

வெற்றி தரும் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்

இந்தியாவில் பயிற்றுவிக்கப்படும் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பில், கீழே உள்ள கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. * சமூக மற்றும் நன்னெறி சார்ந்த விஷயங்களை கற்றல். * ஸ்பான்சர்கள், விற்பனை மற்றும் விற்பனைப் பொருட்கள் சார்ந்தவற்றை அறிதல். * நிதி மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கு இடையேயுள்ள பரஸ்பர தொடர்புகள் குறித்து அறிதல். * மக்கள் தொடர்பு சாதனங்களுக்கு இடையேயுள்ள தொடர்புகளை அறிதல். * விளையாட்டு விதிகள் குறித்து முழுமையாக கற்றல். * விளையாட்டு ஒப்பந்தங்கள் குறித்து கற்றல். * விளையாட்டில் போதைப்பொருளை தடுப்பது எவ்வாறு என கற்றல். * நன்னெறிகள் மற்றும் நிர்வாகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல். தகுதிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளநிலைப்பிரிவில், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி படிப்பை இளநிலையில் படித்திருந்தால், கூடுதல் தகுதியாக கருதப்படும். இளநிலை முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு பி.ஜி., டிப்ளமோவாக ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பு தரப்படுகிறது. வேலை வாய்ப்புகள் * ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டில், விளையாட்டு மேலாளராக பணிக்கு சேர்ந்தால், பல்வேறு வகையான போட்டிகளை நடத்துவதும், பத்திரிகையாளர்களை தொடர்பு கொள்வதும் பணியாக இருக்கும். * நட்சத்திர விளையாட்டு வீரர்களுக்கு மேலாளராகவும் பணிபுரியலாம். இதில் பொது தொடர்புகள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். * தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் அதிகளவில் விளையாட்டு மேலாளர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர். விளையாட்டு போட்டிகளை நடத்துவது மற்றும் மேற்பார்வையிடுவது இவர்களது பணி. * கிளப், ஓட்டல்களிலும் விளையாட்டு மேலாளர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர். உடற்பயிற்சிக் கூடம் மற்றும் விளையாட்டு மையங்களை நிர்வகிப்பது இவர்களது பணியாக இருக்கும். * இளநிலை உடற்கல்வி படிப்புடன், பி.ஜி., டிப்ளமோ ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு, உள்நாடு, வெளிநாட்டில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. கல்வி நிறுவனங்கள் * அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி (www.alagappauniversity.ac.in) * இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் நிறுவனம், டில்லி (www.igipess.du.ac.in)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்