உள்ளூர் செய்திகள்

கல்லூரி கட்டணங்களை ஏ.டி.எம்.,மில் செலுத்தலாம்

கரூர் வைஸ்யா வங்கி, கல்லூரி கட்டணங்களை ஏ.டி.எம்.,கள் மூலம் செலுத்துவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. கரூரில் உள்ள செட்டிநாடு காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில், 26ம் தேதி கரூர் வைஸ்யா வங்கியில் ஏ.டி.எம்.,கள் மூலம் கல்லூரி கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கல்லூரி மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், கல்லூரி கட்டணங்கள், தேர்வு கட்டணம், விடுதி மற்றும் சாப்பாடு கட்டணம் போன்றவற்றை ஏ.டி.எம்.,கள் மூலம் செலுத்தலாம். ஏ.டி.எம்.,கள் மூலம் கல்லூரி கணக்கில், பணத்தை செலுத்திவிட்டு, அதற்கான ரசீதையும் ஏ.டி.எம்.,களிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்த சேவை கட்டணமும் கிடையாது. வாடிக்கையாளர்கள் வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக கையாள்வதற்காக, இந்த தொழில் நுட்ப மேம்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.  இதற்காக, இவ்வங்கி தனது 308வது ஏ.டி.எம்., மையத்தை கல்லூரி வளாகத்தில் நிறுவியுள்ளது. மேலும் இவ்வங்கி, ஒருவர் கணக்கில் உள்ள பணத்தை மற்றொருவர் கணக்கிற்கு, ஏ.டி.எம்.,கள் மூலமே மாற்றும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்