வரலாற்று மன்ற துவக்க விழா
விருதுநகர்: விருதுநகர் வே.வ., வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி வரலாற்றுத்துறையில் இளங்கலை வரலாற்று மன்ற துவக்க விழா நடந்தது. துறைத்தலைவர் பவானி வரவேற்றார். மதுரை டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை வள்ளியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, "மத நல்லிணக்கம்" என்ற தலைப்பில் பேசினார். இளங்கலை வரலாற்றுத்துறை மூன்றாமாண்டு மாணவி கலாவதி நன்றி கூறினார்.