அறிவியல் கண்காட்சி: படைப்புகளுக்கு பரிசு
காரைக்கால்: காரைக்காலில், கல்வித்துறை சார்பில் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சி, சிறந்த படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட கல்வித்துறை சார்பில், தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில், மூன்று நாட்கள் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, நூறு௦க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நேற்று முன்தினம் நடந்த கண்காட்சி நிறைவு விழாவில், கலெக்டர் வல்லவன் தலைமை தாங்கி, கண்காட்சியில் சிறந்த படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்த மாணவ, மாணவியரை பாராட்டி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து, தலத்தெரு அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் கோவிந்தராஜ் (பொறுப்பு), கோவிந்தசாமி பள்ளி தலைமையாசிரியர் வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.