உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை பல்கலை வகுப்புகள் துவக்கம்

சென்னை: அண்ணாமலை பல்கலையின் வேளாண்மை, பொறியியல் படிப்புகளுக்கான வகுப்புகள், இன்று துவங்குகின்றன.இதுகுறித்த செய்திக் குறிப்பு:அண்ணாமலை பல்கலை, இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை, இரண்டாம் ஆண்டு; முதுகலை வேளாண்மை; பொறியியல் முதுகலை பட்டம் முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு; இளங்கலை பொறியியல் அனைத்து பிரிவுகளிலும், இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு வகுப்புகள், இன்று முதல் துவங்கும்.மேலும், இளங்கலை வேளாண்மை, பொறியியல் அனைத்து பிரிவுகளிலும் இளங்கலை, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்