உள்ளூர் செய்திகள்

மாணவியிடம் ‘சில்மிஷம்’; ஆசிரியர் கைது

மேலூர்: மேலூரில் வீட்டுப் பாடம் திருத்தச் சென்ற மாணவியிடம் ’சில்மிஷம்’ செய்ததாக எழுந்த புகாரில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலூரில் அரசு உதவி பெறும், அபுல்கலாம் ஆசாத் நடுநிலைப்பள்ளியில் 11 வயது மாணவி 6ம் வகுப்பு படித்து வருகிறார். மதுரையை சேர்ந்த பாண்டி, 51, ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வகுப்பறையில் வீட்டுப்பாடம் குறித்து கேட்டபோது, ஆசிரியர் பாண்டி ’சில்மிஷம்’ செய்ததாக மாணவி, தனது அக்காவிடம் கூறினார். இதனையடுத்து மாணவியின் உறவினர்கள் மெயின்ரோட்டில் திரண்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து மேலூரில் ஒரு வீட்டில் வைத்து பள்ளி நிர்வாகி சுபைதாபேகம் விசாரித்தார். அங்கும் உறவினர்கள் திரண்டனர். அங்கு வந்த போலீசார், பாண்டியை ஸ்டேஷனுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போது, திரண்டு நின்றவர்கள் ஆசிரியரை அடிக்கப் பாய்ந்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ’தள்ளு முள்ளு’ ஏற்பட்டது.டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்